History

நீலகிரி மலையின் அடிவாரம் என்றழைக்கப்படும் கூடலூரில் அமையப்பெற்ற இக்கல்லூரிக்கு ரூ.50 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பகுதியில் கல்லூரி என்ற கனவு 17-09-2003 அன்று உதகையில் நடைபெற்ற நீலகிரி மாவட்டத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு அ.மில்லர் அவர்களின் வேண்டுகோளின்படி அறிவிக்கப்பட்டு 18 நாட்களிலேயே தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார். இக்கல்லூரி பாரதியார் பல்கலைக் கழகத்தின் (கோவை) கட்டுப்பாட்டிற்குள் இப்பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக உருவெடுத்தது. முன்னாள் கல்வி அமைச்சர் திரு. செ.செம்மலை, பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர். S.சிவசுப்பிரமணியன் மற்றும் பதிவாளராக இருந்த முனைவர் C.சுப்பிரமணியம்.  ஆகியோரின் ஒத்துழைப்போடு பாரதியார் பல்கலைக் கழகத்தின் முதல் இணைப்புக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது.

2003-2004-ம் கல்வியாண்டில் B.Com., BBM., B.Sc., புவியியல் மற்றும் B.Sc., கணிதம் போன்ற பாடப்பிரிவுகள் 240 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் மேலும் புதிதாக B.Com (CA)., B.Sc Computer Science போன்ற பாடப் பிரிவுகள் 2004-2005-ல் ஆரம்பிக்கப்பட்டது. 2010 B.Com (IT),  2015 ம் ஆண்டு MSW., B.Sc., (Physics), 2016 ம் ஆண்டு BCA., B.Sc (IT)., B.Sc., Micro Biology 2023-2024 ம் ஆண்டு B.Sc Botany தொடங்கப்பட்டது. முதுகலையில் M.Com., M.Sc., Geography, M.Sc., Computer Science, M.Sc., Mathematics and MSW., உள்ளது.
தற்போது இக்கல்லூரியனது 2019ம் ஆண்டு தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர். செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களால் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு. ஏறக்குறைய 3300 மாணவ, மாணவிகளுடன் சிறப்பாக செயல்பட்டுகொண்டு வருகின்றது.